புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தலால் டில்லியில் கூட்டங்கள் கூட மாநில அரசு தடை விதித்த நிலையில், 101 நாளாக தொடர்ந்த ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரத்தை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது எனக்கூறி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, டில்லி அரசு உத்தரவிட்டது. எனினும், அதை பொருட்படுத்தாமல், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 'சமூக பரவல்' மூலம் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்